Monday 18 June 2012

அப்துல் கலாம் எனும் ஓநாய் - ஞாநி

"பிரணாபா, கலாமா, என்றால் தயக்கமிருந்தாலும் கூட, நான் பிரணாபையே ஆதரிப்பேன். அவர் வெளிப்படையானஅரசியல்வாதி. கலாம் அறிஞர் என்ற பசுத்தோல் போர்த்திய அரசியல் ஓநாய்."

பரவலான கருத்து நல்ல கருத்தாகவோ எல்லோருக்கும் ஏற்புடையதாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மம்தா பானர்ஜி ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமுக்கு ஆதரவு அளித்தவுடன் ஒரு கூத்து நடந்தது. பேஸ்புக்கில் பலர் குழுமம் குழுமமாக சேர்ந்து கொண்டு கலாமுக்கு ஆதரவு திரட்ட தொடங்கினர். அது ஒரு பாப்புலர் ஒப்பீனியனாக வலுப்பெற தொடங்கியது. இது ஏற்கத்தக்கதல்ல என்பது ஒரு புறம். ஆனால் தங்களை அறிவுஜீவியாக அடையாளப்படுத்திக்கொள்ள இதை ஒரு சிறப்பான வாய்ப்பாக ஒரு சிலர் பயன்படுத்திக்கொண்டனர்.



இதில் ஈழத் தமிழர் ஆதரவு குழுமங்களை சேர்ந்தவர்கள், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு தரப்பை சேர்ந்தவர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் எல்லாம் நின்று விளையாட, பிரபல பத்திரிகையாளர் ஞாநி "சலம்ப' தொடங்கிவிட்டார். அவரது நடவடிக்கைகளை பற்றி இவ்வாறு தான் குறிப்பிட வேணடும். அவரது சில நிலைக்கூற்றுகள் இதோ

"கலாமை குடியரசுத்தலைவர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் மறுத்துவிட்ட செய்தி வந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!"

ஆமாம், தனது கலாம் எதிர்ப்பை காங்கிரஸ் வாழ்த்து என்ற அளவுக்கு தரமிறக்கியுள்ளார். கலாம் ஒரு அணுஉலை ஆதரவாளர் என்பதாலோ, இலங்கை ஆதரவாளர் என்பதாலோ காங்கிரஸ் அவரை எதிர்ப்பதாக எனக்கு தோன்றவில்லை. அவரது அடுத்த ஏவுகணை

"ஏ.பி.ஜே அப்துல் கலாம் சற்று முன் உதிர்த்த முத்து: “என்னை மீண்டும் குடியரசுத் தலைவராகச் சொல்வது ஒரு நல்ல ஐடியா. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பேன்.” கேவலம் !"

இதை ஏன் கேவலம் என்று வரையறை செய்தார் என தெரியவில்லை. அவர் ஐ அம் நாட் வில்லிங் என ஏன் கூறவில்லை என்று வினவுகிறார். அப்துல் கலாம் ஏன் அவ்வாறு கூற வேண்டும் என்பதை அவர் விளக்கவில்லை. இவருக்கு பதவிகள் வரும்போது அது குறித்து முடிவெடுக்க பிறரை அனுமதிப்பார என்ற கேள்விக்கும் பதில் தரவில்லை. கலாம் ஞாநி விருப்பப்படி எனக்கு ஆர்வமில்லை என்று கூறிய பின்னராவது விடுகிறாரா என்றால் அதுவுமில்லை.

"thank you dr kalam for announcing decision not to contest the presidency. we know that you would not like to antagonise the congress government by contesting. we know thast you only aimed for a conxsensus between BJP and congress like last time. we know that you always want to be a good errand boy for the pro american hawks in both bjp and congress. anyway thank you. we feel relieved. you can continue with your dream antics with juveniles."

இது தவிர பா.ஜ.,வுக்கும் யோசனைகளை அவிழ்த்துவிடுகிறார்.

"போட்டியில்லாமல் பிரணாபை ஜெயிக்கவிடக் கூடாது என்று பிஜேபி நினைத்தால், சங்மாவையே அவர்கள் ஆதரிக்கலாம்."

கலாமை ஆதரிப்பதன் மூலம் பா.ஜ.,வுக்கும் கலங்கம் எற்படக்கூடாது என்று கலங்குகிறார்.

இலங்கை தமிழர் பிரச்னை, கூடங்குளம் அணுஉலை விவகாரம் போன்றவற்றில் கலாம் நடந்து கொண்ட விதம் தவறு. இன்னும் சொல்லப்போனால் கலாம் ஜனாதிபதியானால் தமிழனுக்கு எதுவும் கிழிக்கப்போவதில்லை, அவருக்கு இரண்டாம் முறை ஜானதிபதியாகவும் தகுதியில்லை. ஆனால் கலாமை ஒநாய் என்ற வரையறைக்குள் அடக்கிவிட்டு பிரணாப், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., மீது அனுதாபம் காட்டுவதையே ஏற்க முடியவில்லை.  தன்னை மிகப்பெரிய மாற்று சிந்தனையாளனாக முன்னிறுத்த வேண்டும் என்ற அவரது ஆர்வத்தை தவிர வேறு எதையும் ஞாநியின் எழுத்தில் காண முடியவில்லை.

No comments:

Post a Comment